நவீன டிஜிட்டல் வாடகை வாகன முன்பதிவுகளை புரட்சிகரமாக்கும் வகையில், அதியுயர் தொழில்நுட்பம், எந்நேரத்திலும் அணுகக்கூடிய வகையிலான மேம்படுத்தப்பட்ட கிடைக்கும்தன்மை மற்றும் சேவை வழங்குநர்களின் மேம்பாட்டுத் தரங்கள் ஆகியவற்றுடன் எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதும், சௌகரியமானதுமான சேவையை வழங்குதல்.
டிஜிட்டல் வாடகை வாகன துறையில் ஓர் பிரத்தியேக அடையாளத்தை உருவாக்கல் மற்றும் சர்வதேச சந்தையில் ஈடுபடுவதற்காக இலங்கையில் தலைசிறந்த சேவை வழங்குராக உருவாகுதல்.
YOGO ஆனது ஒரு குழவாக இலங்கையின் சந்தையில் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. தொலைவு அளவீடுகளில் 100% சதவீத துல்லியத்தை கொண்டிருக்காத ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டியங்கும் வழக்கமான அன்ட்ரொயிட் திறன்பேசி வாடகை வாகன செயலிகளைப் போலல்லாது, ஓட்டுநரினதும், பயணிப்பவரினதும் நிதிசார் சேவையை சேமித்து துல்லியமாக தொலைவினை கணித்து வழங்கும் LINK மீட்டர் தளத்தை அடிப்படையாகக் கொண்டு YOGO செயற்படுகிறது.
YOGO சேவையின் முதற்கட்டம் மேல் மாகாணத்தில் வழங்கப்படவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து சிறிது காலத்தில் இலங்கை முழுவதும் விஸ்தரிக்கப்படவுள்ளன.
மிகச்சிறந்த சேவை தரங்களை பேணும் வகையில், எமது சேவை வழங்குநர்கள் அனைவரும் கடுமையான தெரிவு செயல்முறை ஊடாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த முறைசார் செயல்முறையானது, எமது சேவை வழங்குநர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதுடன் எமது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பானதும், ஒழுக்கமிக்கதும் மற்றும் மரியாதைக்குரிய பயண அனுபவத்தை உறுதிப்படுத்துவதாக அமைவதோடு, YOGO இனை பிரதிநிதித்துவம் செய்வது கௌரவத்தை ஏற்படுத்துவதாகவும் அமையவுள்ளது.
YOGO ஆனது பயணிகள் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை காட்டுகிறது. எமது பயணிகளின் சௌகரியத்தை உறுதிப்படுத்துவதே எமது முன்னுரிமையாகும். ஆகவே, பயணிகளின் பாதுகாப்பு தரங்களை புதிய தளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் YOGO ஆனது, அவசர நிலைமைகளின் போது விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட கைபேசி அனுப்பும் அலகு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த தனிச்சிறப்பான அம்சத்தினை செயலியில் உள்ள SOS பொத்தானை அழுத்துவதன் மூலமாகவோ அல்லது 1314 எனும் ஹாட்லைன்னிற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலமாக செயற்படுத்திக் கொள்ள முடியும்.
இலங்கையின் டிஜிட்டல் வாடகை வாகன சேவை துறையில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படவுள்ள மற்றுமொரு தனிச்சிறப்பான அம்சமாக 'பெண்ணுக்காக பெண்' சேவை அமையவுள்ளது. இந்த விசேட சேவையானது பெண் பயணிகளுக்கு பெண் ஓட்டுநர் ஒருவரை ஒட்டுநராக கோர வழிவகுத்துள்ளது.
இந்த சேவையை அனுபவிப்பதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், எமது ஹாட்லைனுக்கு அழைப்பை ஏற்படுத்தல் அல்லது ‘YOGO பிங்க்’ பொத்தானை செயற்படுத்துவது மாத்திரமே. இந்த அம்சத்தை பெண்கள் மட்டுமே கோரலாம்.
இன்றைய சமூகத்தில் அனைவருமே பரபரப்பான வாழ்க்கைமுறையை கொண்டுள்ளோம். YOGO ஆகிய நாம், உங்கள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதில் மிகக்குறைந்த பயண சுழற்சி நேரத்தின் முக்கியத்துவம் தொடர்பில் நன்கு புரிந்து வைத்துள்ளோம். YOGO உடனான வாடகை வாகனமொன்றினை மீண்டும் ஒருமுறை நீங்கள் முன்பதிவு செய்ய முற்படுகையில் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாத வகையில் செயற்படவுள்ளோம்.
நாட்டிலுள்ள மிகப்பெரிய வாடகை வாகன ஓட்டுநர் சமூகத்துடன் இணைந்து YOGO ஆனது, உடனடி வாடகை வாகன கோரிக்கைகளின் போது இடைவிடாத சேவையை வழங்கத் தயாராகவுள்ளது.
YOGO ஆனது, சிறந்த அனுபவத்தையும், புத்துருவாக்க யோசனைகளையும் கொண்ட துறைசார் நிபுணர்களை எமது குழுவில் கொண்டுள்ளது. இந்த நிபுணர்கள் தொடர்ந்து உங்களுக்கு அதிசிறப்பான பயண அனுபவத்தை வழங்குவதில் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.
திரு.துஷார காரியகரவன – பிரதம நிறைவேற்று அதிகாரி – முகாமைத்துவ பணிப்பாளர், LINK லங்கா, வாடகை வாகன மீட்டர் துறையில் தசாப்தத்திற்கும் மேலான அனுபவம்.
திரு.ருவன் ஜயன்நெட்டி - தகவல் தொழில்நுட்ப துறையின் தலைவர்
ருவன் ஜெயனெட்டி - சிஓஓ மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி
தர்மபிரியா கமகே - வணிக மேம்பாட்டு மேலாளர்
ரங்கா - மேலாளர், கார்ப்பரேட் விற்பனை